இயற்கை மீது
மனிதன் கொண்ட அச்சமும், தன் துன்பம்
நீங்கிய எதிர்கால வாழ்க்கை மீது அவன் கொண்ட ஆசையும் தெய்வ வழிபாட்டிற்கான தொடக்கமாக உள்ளது. மக்களிடையே சமயம் குறித்த நம்பிக்கைகளும், இறைவன் குறித்த சிந்தனைகளும் தொன்று தொட்டே
காணப்பெற்று வருகின்றன. இறைவழிபாடு புனிதமான ஒன்றாகப் போற்றப்பட்டு வருகின்றது.
மனித மனத்தின் அழுக்குகள் அகலத் துணை செய்வது இறைவழிபாடே ஆகும்.